அவதாரம் பத்து

மறைகாக்க மீனம் மலைதாங்க வாமை
பொறைகாக்க வேனநர சிம்மம் ;- குறளோன்
அறங்காக்கக் கோடரியன் கண்ணனண்ணன் ராமன்
நெறிகாக்கும் கல்கி நினை

மறை காக்க வேதத்தைக் காக்க மீனம்
மலையைத்தாங்க ஆமை
பொறை என்பது இங்கு பூமி எனக்கொள்க
பொறைகாக்க வேனநர சிம்மம் ;- குறளோன்

ஏனம் வராகம்
குறளோன் வாமனன்

கண்ணன் அண்ணன் இது கண்ணனையும் கண்ணனின் அண்ணன் பல ராமனையும் குறிக்கும்
ஒரே யுகத்தில் இரு அவதாரம் ஒரேசொல்லில் இரு அவதாரமும்
கோடரியன் பரசு ராமன்

எழுதியவர் : சு.ஐயப்பன் (13-Jun-19, 5:53 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
Tanglish : avatharam paththu
பார்வை : 228

மேலே