தமிழ்பிறந்ததால்
தமிழ்பிறந்ததால் இசைபிறந்ததா(ம்)?!
இசைபிறந்ததால் தமிழ்பிறந்ததா(ம்)?!
ஒலிபிறந்ததால் மொழிபிறந்ததா(ம்)?!
மொழிபிறந்ததால் ஒலிபிறந்ததா(ம்)?! (தமிழ்)
அடியளந்துதான் கவிபிறந்ததா(ம்)?!
கவிபிறந்துதான் அடியளந்ததா(ம்)?!
எழுத்துவந்துதான் பொழுதளந்ததா(ம்)?!
பொழுதளந்துதான் எழுத்துவந்ததா(ம்)?! (தமிழ்)
ஆசைவந்ததால் ஓசைவந்ததாம்!
ஓசைவந்ததால் வாசிஎன்றதாம்
வாசிஎன்றதால் வாசிக்கின்றதாம்
வாசிக்கின்றதால் சுவாசிஎன்றதாம் (தமிழ்)
உயிர்மெய் இணைந்ததால் உயிர்மெய் வந்ததாம்!?
உயிர்மெய்வந்ததால் உயிர்ப்புவந்ததாம்
இயலெழுந்ததால் இசைபிறந்ததா(ம்)?!
இசைபிறந்ததால் இயலெழுந்ததா(ம்)?! (தமிழ்)
எழுத்துவந்ததால் வார்த்தைவந்ததாம்
வார்த்தைவந்ததால் பதங்கள்வந்ததாம்
காற்று(உ)வந்ததால் பாட்டுவந்ததாம்
பாட்டுவந்ததால் காற்று(உ)வந்ததாம் (தமிழ்)
எழுத்தின் பிறப்பிடம் எடுத்துச்சொன்னதாம்
எழுத்தின் சிறப்பினால் இனம்பிரித்ததாம்
அழுத்தம் திருத்தமும் அமைத்துத் தந்ததாம்
அமிழ்தமிழ்துதாம் தமிழ்தமிழ்தாம் (தமிழ்)
திணைகள் இரெண்டென திணைகள்கண்டதாம்
திணையில் எதனையும் தாழ்த்திச்சொன்னதா?
திணையில் உயர்திணை மற்றது அஃறினை
தேர்ந்துசொன்னதாம் தெளிந்துசொன்னதாம் (தமிழ்)