வாழ்த்துப் பாக்கள் - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

UK வில் வாழும் பாடினி பிரியத்தமிழ் உதயாவை வாழ்த்தி,

மாடிப்பே ருந்தின்மட் டில்லாப் பெருமைதனை
நாடி நமக்களித்த நல்லாளாம் - பாடினி
லண்டன்வாழ் அன்பு பிரியத் தமிழ்உதயா
கொண்டலென வாழ்க குளிர்ந்து!

பாடினி: a woman of the பாணர் class, a songstress.
கொண்டல் - மேகம் (சூடாமணி நிகண்டு)

மதுரையில் வாழும் பிரபல கண் டாக்டர் பாலபார்வதியை வாழ்த்தி,

நல்லோ ரெலாம்போற்றும் நற்குண கண்டாக்டர்
சொல்லும் செயலிலும் சீருடைய - நல்லாளாம்
பீடுடைய சீமாட்டி பாலபார்வ தீயினன்பை
நாடுவோர் பெற்றார் நலம்!

அனுமதி இன்றியே உள்ளே நுழைந்த இனிய கவிதைகள்

அனுமதி இன்றியே உள்ளே நுழைந்த
இனிய கவிதைகள் என்ன? - முனியா(து)
அவற்றையும் சொல்லி விடுங்களேன் முந்தி;
தவறாது வாசிப்போம் யாம்!

காரைக்காலில் வசிக்கும் என் நண்பர் திரு.இராகவசாமியின் இளைய சகோதரர் திரு.கேசவசாமியை வாழ்த்தி,

அன்புநிறை கேசவ சாமிக்(கு) அணிகலனாய்
மன்னுபு கழ்கலை மாமணி - என்றவோர்
பட்டம் குடிய ரசுத்தலைவர் ஈந்தாரே!
மட்டிலாப் பேறுபெற்றீர் நீர்.

திரு.பாண்டியன் அவர்களின் பதிவைப் பார்த்து வியந்து,

அன்புள்ள பாண்டியன்,

இது நிஜமா? அல்லது செயற்கைப் படமா? (Graphics), எங்கே எடுக்கப்பட்டது? நெஞ்சம் பதறுகிறது.

பாட்டு(ம்) ஒருபக்கம் நன்றாய் இருக்கட்டும்!
கேட்கிறேன் எப்படி கால்மேல்கால் - போட்டே
அமைதியாக உட்கார்ந்தி ருக்கிறீர்கள்? ஆஹா!
சிமயமதைக் காண சிலிர்ப்பு!

சிமயம் - மலை, மலையுச்சி (சூடாமணி நிகண்டு)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-15, 1:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 103

மேலே