மது தொடர்பான வெண்பா
நீறுபூத்த நெருப்பு நீவாங்கிய கடன்கள்!
கூற்றுவன் போலுள்ள பகை – மூன்றை
அன்றே அழித்(து) விட்டோ மென்றால்
நன்றாய் வருமே நித்திரை!
தானமிகின் வள்ளல்! தாரமிகின் தொல்லை!
ஊனம் உள்ளத்தில் ஏறிட – ஆணவம்
தலைக்கேறி தரணிதனில் தாழ்ந்தே என்றும்
குலைந்தேதான் போவார் குவலயத்தில்!
நாளை என்பார் நமக்கென்ன என்பார்
வேலை செய்யாமலே வீணாய் – நாளை
கழித்தே சோம்பலில் கண்துஞ்சி வாழ்வோருக்கு
அழையா)து) வருமே அல்லல்!
கள்ளென்ற அரக்கனை கையிலே எடுத்து
களிப்பாக இருக்கு மென்றே – உள்ளாக
அருந்திட்(டு) உளருகின்ற ஊதாரி உன்மத்தன்!
இருந்தென் பயன் இவ்வுலகில்!
தாரமா! தாயா! ஆரமா அரவமா!
தரமறியா தான்தோன்றி பேடிகள் – நாற்ற
கள்ளுக்(கு) அடிமை ஆனோர் தம்மை
சுள்ளென்ற சொல்லால் சுடுக!
--- கே. அசோகன்.