பாழாய் போன மனசு

வானவில்லை பிடுங்கி
செட்டை செய்து
பறக்கத் தொடங்கி விட்ட
பட்டாம்பூச்சி
என் முற்றத்து புல்வெளியை
தாண்டிக் குதிக்கிறது
மேலெழும்பி
தட்டித் தவழ்ந்து
எதிரே தெரியும்
தேவாலயத்தின் முகட்டில்
எட்டி உதைக்கிறது
இன்னும் பறந்து பறந்து
காற்றைக் கிழித்து
சப்தமிட்டபடி
இதழ்களில் குவிந்து
கூவி எழுகிறது
பாயும் மேகங்களை
துரத்தி இழுத்து தன்னுள்
இருத்த முனைகிறது
கவிழ்ந்து தெறித்த
துளி மழையில் நனைந்து
படிந்த கரும்புகையென
எரி நட்சத்திரமாய் விழுகிறது
சற்றே நிமிடத்தில்
வான் பறவையென மிதந்த
அந்த வைகறைப் பனித்துளியாய்
இந்த பாழாய் போன மனசு
என்னடா இது கேடுகெட்ட உசிரு. ....!
தமிழ் உதயா

எழுதியவர் : தமிழ் உதயா (12-Jan-17, 9:20 pm)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 136

மேலே