நீ வருவாய் தானே

பயணத்தை
நிறுத்தாத இலைகளில்
புல்லாங்குழல் இசை
பாட்டுக் கச்சேரி
முடிக்காத
ஆழக் கடலலை,
தறி விலக முடியாத
முற்றிப் பழுத்த
பருத்திச் செடி,
கீதம் ஒலிக்கப்
பிறளாத குஞ்சுப்
பறவையினம்,
சுவாசப்பை
நிறைக்கும்
பூக்களின் வாசம்,
நெஞ்சு
குளிர்த்தும்
மழைத்தூறல்,
உதிர்ந்தும்
நம்பிக்கையுடன்
இருக்கும் மரக் கிளைகள்,
கடற்துளிகளை
அள்ளிச் செல்லும்
மேகக் குவியல்,
இப்படி பிரிந்து பிரிந்து
நீயும் நானும்
எத்தனை முறை கரையொதுங்குவது?
நுரைத்த காதலை
ஏந்திய நதியென...
கொஞ்சம் ஆசுவாசமாய்
தோள் தேடும் கேசத்தை
கோதும் விரல்களுக்கு
சிறகு முளைத்தனவா ?
நினைவு தப்பும் எனில்
விழுந்து தெறித்த பனித்துளியை
அள்ளி எடுத்து
அனுப்பி வைக்கிறேன் ....
வசந்த
காலத்தோடு
நீ வருவாய் தானே....!
தமிழ் உதயா

எழுதியவர் : தமிழ் உதயா (12-Jan-17, 9:33 pm)
சேர்த்தது : தமிழ் உதயா
Tanglish : nee varuvaay thaane
பார்வை : 197

மேலே