பார்வைகளுக்காக ஒதுக்கப்பட்ட பக்கங்கள்
என்னைப்பார்த்து புன்னகைத்தால்தான்
அவளுக்கான அடுத்தக் கவிதையை
எழுதுவேனென முடிவிலிருந்த நான்
சட்டென கண்டேன் யாருடனோ
அழகாக புன்னகைத்து பேசிக்கொண்டிருந்தாள்…
பசியிலிருந்த காகம் பலகாரத்தை ஏதோ
கடையிலிருந்து தூக்கி பறந்துசென்று
எங்கோ அமர்ந்து விரைவாய் உண்பதுபோல்…
யாருக்காவோ பூத்த அந்த புன்னகையை
கள்ளத்தனமாக மனதில் படம்பிடித்து
பறந்துவந்து பசியாற்றிக்கொண்டிருக்கிறேன்
எனது வெள்ளைத்தாள்களுக்கு அவளின்
பார்வைகளுக்காக ஒதுக்கப்பட்ட பக்கங்களில்…