அறிவே தாயம்மா

அறிவே தாயம்மா!

அறிவே தாயம்மா!
அன்பே நீயம்மா!
சிறகே தாயம்மா!
சிந்தனை நீயம்மா!

அம்மா உன் மடியம்மா!
அது என் உலகம்மா!
அம்மா உன் தோளம்மா!
அது என் நூலம்மா!

நீதானே நானம்மா!
நிழலாக தானம்மா!
உயிராக நானம்மா!
ஊனுனது தானம்மா!

நானென்று ஏதம்மா!
நினைவெல்லாம் உனதம்மா!
நாளென்று ஏதம்மா!
நடப்பதுன் வேதம்மா!

தமிழ்தானே மொழியம்மா!
தாய்தானே வழியம்மா!
மதமென்ன மறையம்மா!
மாதாமுன் நிறையம்மா!

ஆலயம் ஏனம்மா!
அம்மாநீ தானம்மா!
பூசையும் ஏனம்மா!
போற்றநீ தானம்மா!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (5-Jan-16, 9:39 am)
பார்வை : 428

மேலே