கேள்வி

அன்னை கருவில் உதித்து...
தமிழ் மண்ணிலே அவதரித்தோம்...
அன்று..
ஆறறிவை தாண்டி ஏழாம் அறிவாய்
உலகை திரும்ப வைக்க...
இன்று
ஆறுறிவும் மட்கி மண்ணோடு மடிந்தது ஏன்¿
சுய சிந்தனையெல்லாம் செத்தே போனது...
மற்றவர்களிடம் கையேந்தையிலே..
வாக்கு என்ற வாழ்க்கையை...
அடகு வைத்தோம் அற்பதனத்திற்கு.
பேச்சுரிமை நாட்டில்...
ஊமையாய் திரிந்திடதானோ...
இமை மூடிய மக்களே...
நீ விழி திறப்பது எப்போது...
நடிப்பு என்பது ஓர் தொழில்தான்..
நடிகனாய் ஏற்றுக் கொண்டாய்...
துயரக்காலத்தில் ஆனந்தப்பட..
ஆனந்தத்தில் கொண்டாட..
அவர்களும் நடித்திட...
தலைவனாய் ஏற்றுக் கொண்டது
உன் தவறு...
கலையை ரசித்தவரெல்லாம்...
நாயகருக்கு அடிமையானோம்..
கூட்டம் சேர் என்று அவர்கள் கூறவில்லை...
நீயே சேர்த்தாய்...
ஆடம்பரம் செய் என்று அவர்கள் ஆர்ப்பரிக்கவில்லை...
நீயே ஆட்டம் போட்டாய்...
உன் தொழிலை நீ மறந்து விட்டாய்..
அவர்கள்
தொழிலில் செல்வம் பெற்றனர்..
இன்று
எதற்கெடுத்தாலும்
அவர் தரவில்லை, இவர் தரவில்லை
என்று ஏளனப் பேச்சுகள் ஏராளம்...
வார்த்தைகள் விளையாடுது தாராளமாய்...
புரியாமல் இருக்கிறேன்..
உன்னை ஏமாற்றி அவர்கள் சம்பாதித்தனரா...
இல்லை
உன்னை சுரண்டி சம்பாதித்தனரா..

எழுதியவர் : (5-Jan-16, 10:01 am)
Tanglish : kelvi
பார்வை : 54

மேலே