எல்லாம் ஏசுவே

ஆதியிலே வார்த்தை இருந்தது.

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
யோவான் 1:1-5
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லாம் ஏசுவே!

ஆதியில் சத்தியம் வார்த்தை இருந்தது-அது
தேவனிடம் நித்தியம் தேவனாய் இருந்தது.
தேவனால் யாவுமாய் உருவானது.-அவரே
ஏசுவாக தேவனோடு ஜீவனாய் இருந்தார்

ஏசில்லாமல் ஏதுமில்லை ஆதியு மில்லை-எல்லாம்
ஏசுதானே ஜீவனுள்ள தேவனு மெல்லை
ஜீவன்தானாய் மனிதருக்கு ஒளியாகினார்--வல்ல
தேவன்தானே இருளி லொளிக்கு வழியாகினார்.

ஆதிதானே ஆவியாகத் தேவ னானது--அதுவே
தேவனாக ஏசுவாக ஜீவ னானது.
பாவிகளால் தூயாவி தானானது--புவியில்
ஏசுவாய் மனிதனாய் பாட மானது.

பாவிகளை இரட்சித்து தூய்மை யாக்கினார்--பாவிகள்
சாபங்களை சிலுவைக்கு தீப மாக்கினார்.
பாவங்களின் பாவமாய் தானுமாகினார்--மீண்டும்
ஆவியாய் விடுவித்து வான மேகினார்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (26-Dec-15, 9:06 pm)
பார்வை : 149

மேலே