காத்திருக்கிறேன்

* * * * * * *
அவள்
ஒரு தாமரை இலை
எப்படி இருக்க முடிகிறது அவளால். .?
என்னை
பூரணமாக பயன்படுத்துகிறாள்
என்னிலேயே
நீந்தி நீந்தி வருகிறாள்
என்னையே
ஏந்தி ஏந்திப் பருகுகிறாள்
பிறகேன் அணைக்கிறாள் இல்லை. ..?
அவ்வளவு
கொடுமையானவளா
உணர முடியாதிருக்கிறது
என்னால். .....

அவள் ஒரு
மெழுகுவர்த்தி
எப்படி இருக்க முடிகிறது அவளால்
தன்னை
பூரணமாக பயன்படுத்துகிறாள்
தன்னையே
உருக்கி உருக்கி மிளிர்த்துகிறாள்
தன்னையே
நோகடித்து நோகடித்து
சாகடிக்கிறாள்
பிறகேன்
அணைகிறாள் இல்லை
அவ்வளவு
இனிமையானவளா
உணர முடியாதிருக்கிறது
என்னால். ..

இதில் எவள்
என் மனைவி. ....?
காத்திருக்கிறேன் நான். ..!
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (26-Dec-15, 9:46 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 117

மேலே