யுவராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : யுவராஜ் |
இடம் | : கோயமுத்தூர் |
பிறந்த தேதி | : 26-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 191 |
புள்ளி | : 17 |
ஒவ்வொரு நாளும் எதையோ தேடி கொண்டு இருக்கும் ஒருவன்
கடந்து செல்ல மறுக்கும் நேரம்
காத்திருக்கும் என் கால்கள்
உன் கருவரை நோக்கி
என் பயனம் தொடரும்....
அன்னையே! வழி தேடும்
வலிகள் நிறைந்த
என் மனதிற்கு வழிவிடும்
தெய்வம் நீயே அன்பே....
தேடி கிடைத்த எதுவும்
இல்லை நீ
என்னில் புதைந்த
உயிர் நீ....
ஊதி தள்ளிவிட்டது
உலகம் என்னை
அருகில் நீ இல்லா
இந்த நிமிடத்தில்
உன்னை சுத்தி சுத்தி
விளையாடிய நான்
இன்று சுத்த விட்டு
ஓடிய நாட்கள் என் நினைவில்...
விடிய விடிய எரியும்
விவசாயிகள் வயிற்றுடன்
தெறு விளக்கும்...
கொசுகள் சத்தம் காதில்
பசியின் வலி வயிற்றில்
இரண்டுமே தூங்க விடாது...
ஏழைகளை....
இருள் நிறைந்த உலகிலேயே
இடம் தந்த இனியவளே-உன்
இரத்தத்தை ஏனக்களித்து
இதயத் துடிப்பை துவக்கியவளே...
அவள் உயிரில் என்னை பிரித்து
உயிர் அளித்தாள் எனக்கும்
உயர்வான உறவான அம்மா!!!
என்று என்னை அழைக்கவைத்தாள்
பாலுட்டி பாசம் காட்டி
மடியில் சுமந்தாள் என்னை
இவளின் நீதிமன்றத்தில்
என்றும் தான் நிரபராதி
உணவு உண்ண மறுத்த என்னை
நிலாவை காட்டி ஏமாற்றிய தாயே
நீ இல்லாத வெற்றிடத்தை
தமிழ் நிரப்பும் என்று எப்படி நம்பினாய்...
தான் விட்டு போனாலும்
தமிழ் விட்டு போகமல் இருக்க
தாய் பாலும் தமிழ் பாலும்
கலந்தளித்தாள் எனக்கு
உன் பாதச் சுவடுகளை
மண்ணுலகும் விண்ணுலகம்
தேடி அடைந்து என் தெய்வம்
நி
கணவர் வேலைக்கு போய்
உழைத்து தனது வியர்வையை
காசாக்கி அரிசி வாங்கி
வருவார் என்று காத்திருந்த
காலம் போனது....
மனைவியே வேலைக்கு போய்
தன் சொந்த செலவில்
அரிசி வாங்கி -குக்கர்
விசில் சத்தத்திற்காக
காத்திருக்கும் காலம் இது...
விறகு பொருக்கி அடுப்பு
எரித்த காலம் போய்...
சுவிச்சை தட்டி கரண்ட்
அடுப்பில் சமையல் செய்யும்
காலம் இது...
அன்புடன்
யுவராஜ். எஸ்
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
கற்பனையில் உனக்கொரு
உருவம் கொடுத்து பாா்க்கின்றேன்
உருகி உருகி உனக்காக
உதிரம் வெளுத்து சாகின்றேன்
இல்லாத உன் நிஜமோ
என் நெஞ்சை வதைக்கிறது
ஏங்கி ஏங்கி என் நிழலும்
எனக்குள்ளே கரைகிறது
ஈரக்காற்று பட்டாலும்
என் மேனி எாிகிறது
ஏகாந்த இரவும்
எனை ஏனோ சுடுகிறது
போதுமென்று உன் நினைவைத்
துாக்கிப்போட முடியவில்லை
பொத்திவைத்த ஆசைகளோ
எனைத்துாங்க விடுவதில்லை
பருவம் வந்த நாள் முதலாய்
சோ்த்து வைத்த உன்நினைவு
பாதியிலே போய்விடுமோ
பாவை நான் உனை காணும் முன்னே.
நிறத்தில் தானடி
நீயும் நானும் வேற வேற...
கொணத்திலோ
கொஞ்சிம் பேசும் குரலிலோ
நீயும் நானும் ஒன்னுதானடி
அந்த அந்தி வானத்தை பாரு
அதுதான்டி உன்நிறம்
அஞ்சு நிமிசம் கழிச்சு பாத்தா
அதுதான்டி என்நிறம்
நிறமாக இருந்தாலும்
நிழலாக இருந்தாலும்
நிரந்தரமென்பது எதுவுமில்லை-நம்
காதலை தவிர..!
பஞ்ச பூதங்களே பார்த்தாயா...
பச்சோந்தி என்று நினைத்தாயா...
இயற்கைக்கு கூட
இறைவன் நிறத்தை மாற்றியுள்ளான்...
எது எப்படியோ
எம்மனசு எப்போதுமே வெள்ளைதான்...
உன்னை வரைந்து வச்சுருக்கேன்
அதன் உள்ளதான்...
ஒப்பிட முடியாது நிலவின் அழகை
புரிந்து கொள்ள முடியாது
ஆணின் குணத்தை
இருட்டு வரும் அமாவாசை
பகலும் வரும் பௌர்ணமி
இன்பம் வரும்
துன்பம் வரும்
ஆணின் வாழ்க்கையில்
இருந்தாலும் இல்லை பகலிலே
உறவிலே பிணைந்து வாழ்க்கை
இரவிலே உனைவிட்டால்
யாரும் இல்லை
பாசம் காட்ட ஆணுக்கு நிகர் ஆணே..
மணம் திறப்பாயோ-உன்
மணம் திறந்து உன்மை
உரைபாயோ....
உரைந்து நின்றேன்-உன்
அழகில் மறந்து நின்றேன்
தூக்கத்தை தொலைதேன்
உன்னை நினைத்து!!!
வாங்கி வந்த வரமோ
இல்லை தேடி வந்த உறவோ??
நான் எப்படி உன்னை
நினைக்காமல் இருப்பேன்
மென்மையான பேச்சால்
கரைத்தாய் என்னை
சிந்தையில் நினைகையில்
அவ்வளவு சந்தோஷம்
உன்னை என் இதயத்தில் வைப்பேன்
உன் முகத்தில் சிரிப்பை மட்டும்
குடிவைப்பேன்...
தெரிந்ததை மறந்தேன்
தெரியாததை உணர்தேன்
உதயம் தெரிந்தது-பூ
உதிர்ந்தது புரிந்தது
மறைவது தெரியும்-வாழ்வில்
மாறாது எதுவும்
விழுந்தாலும் எழுவோம்
விலையில்லாமல் பெருவோம்???
அனுபவமும்!!!தன்நம்பிக்கையும்!!!
பார்வையை விரிவாக்கு
பாசத்தால் அனைத்தையும்
உனதாக்கு.....