காதலுக்கு வண்ணமில்லை

நிறத்தில் தானடி
நீயும் நானும் வேற வேற...
கொணத்திலோ
கொஞ்சிம் பேசும் குரலிலோ
நீயும் நானும் ஒன்னுதானடி
அந்த அந்தி வானத்தை பாரு
அதுதான்டி உன்நிறம்
அஞ்சு நிமிசம் கழிச்சு பாத்தா
அதுதான்டி என்நிறம்
நிறமாக இருந்தாலும்
நிழலாக இருந்தாலும்
நிரந்தரமென்பது எதுவுமில்லை-நம்
காதலை தவிர..!
பஞ்ச பூதங்களே பார்த்தாயா...
பச்சோந்தி என்று நினைத்தாயா...
இயற்கைக்கு கூட
இறைவன் நிறத்தை மாற்றியுள்ளான்...
எது எப்படியோ
எம்மனசு எப்போதுமே வெள்ளைதான்...
உன்னை வரைந்து வச்சுருக்கேன்
அதன் உள்ளதான்...