ஒரு நூறு கர்பப்பை

கர்பப்பை
ஒன்றென்று யார் சொன்னது
உன்னை அள்ளி அணைக்கையிலே
நீ அடிவயிறு தீண்டயிலே
என் ஆதி அந்தமும்
அற்புதமாய் தோனுதடி
வித்தாய் நீ விழுந்த இடம்
ஒரு நூறாய்
உடல் முழுக்க பரவி
உன்னை சுமந்திடத்தான் ஏங்குதடி
என் அணுக்களின்
அசைவெல்லாம் உன்னை அற்புதமாய் உணருதடி
உனை ஏந்தும் வேளையிலே
என் ஆன்மாவும் சிலிர்க்குதடி
என் முந்நூறு நாள் தவமே
எனக்கு வாழ்வு தந்த வரமே

எழுதியவர் : பத்மபிரியா (9-May-21, 11:36 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
பார்வை : 64

மேலே