m s muthukrishnan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  m s muthukrishnan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-May-2013
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  16

என் படைப்புகள்
m s muthukrishnan செய்திகள்
m s muthukrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2018 7:17 pm

ஆண்டவனுக்கு தெரிந்திருக்கிறது,
அதனால் தான்
அமெரிக்கா காற்று என்றும்
ஆந்திரா காற்று என்றும்
இங்கிலாந்து காற்று என்றும்
இந்தியா காற்று என்றும்
பிரிக்க முடியாதபடி
சேர்த்து வைத்து விட்டான்.
இல்லாவிட்டால் ஏகப்பட்ட போராட்டங்களால்
நாடுகள் நாசமாய் போயிருக்கும்,
அதிலும் சிலபேர் மட்டும் காற்றை
சேர்த்து வைத்து சில்லறை பார்த்திருப்பார்கள்.

மேலும்

காற்றை வர்ணித்துப் பல கவிதைகள் வந்திருக்கலாம். ஆனால், காற்றைக் காப்பாற்றும் ஒரு கவிதையாய் இது. 24-Jun-2019 8:50 pm
என்ன செய்ய காற்றையும் மாசுபடுத்திவிட்டார்களே... 22-Jun-2018 2:24 pm
m s muthukrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2018 8:14 pm

மூச்சிரைக்க வெகு தூரம்
ஓடி வந்து விட்டேன்.
நின்று முன்னால் பார்க்கிறேன் ,
நிறைய பேர் ஓடி கொண்டிருக்கிறார்கள் .
பின்னால் பார்க்கிறேன் ,
அங்கும் நிறைய பேர்
ஓடி வருகிறார்கள் .

நான் ஏன் இவ்வளவு தூரம் ஓடி வந்தேன்?
எனக்கு முன்னாலும், பின்னாலும்
ஏன் எதற்கு எல்லாரும்
ஓடி கொண்டிருக்கிறார்கள்?
நெடு நேரம் யோசித்தும்
எதுவும் விளங்கவில்லை.

இனி மேல் யோசித்து
ஆகப்போவது ஒன்றும் இல்லை,
திரும்ப ஓடுவது தான் உத்தமம்.

இதோ ஓட ஆரம்பித்து விட்டேன்,
மூச்சிரைக்கிறது,
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்,
நான் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறேன் ?
அவர்கள் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ?

மேலும்

நானும் எதையோ தேடி ஓடிக்கொண்டுதான் இருந்தேன், வழியில் ஒரு புதையல் கிடைத்தது, திறந்து பார்த்தேன் பெட்டியில் மிக மிக யதார்த்தமான இந்தக் கவிதை இருந்தது. புத்துணர்வோடு மீண்டும் மூச்சிரைக்க ஓடுகிறேன். எங்கு போகிறோம் என்பதை அறிய வழியில் பெயர்பலகைகள் உண்டு. ஆனால் ஏன் போகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள இதுபோன்ற உயிர்பலகைகள் சிலவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஓடுகிறேன். நன்றி 23-May-2018 8:14 pm
m s muthukrishnan - விஜயகுமார் நாட்ராயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2017 4:40 pm

அனிதா இறந்துவிட்டாள்
இது வெறும் தகவலல்ல
ஒரு தலைமுறையின் கதறல்.

இது அனிதாவின் மரணமல்ல
அநீதியை அவளுக்கிழைத்த
அரசாங்கத்தின் மரணம்.

தானாக முடிவைத் தேடிக்கொண்டதால்
இது தற்கொலையாகிவிடாது
பதவி சுகத்திற்காக பாமரனை நோகடித்த
படுபாவிகள் செய்த படுகொலை

அன்று ரோஹித் வெமுலா
இன்று அனிதா
இயங்காத அரசாங்கத்தில்
இதயங்கள் மட்டும்
எதற்க்காக இயங்கவேண்டுமென்று
துடிப்புகளைத் துண்டிக்கிறார்கள்

ஓவியாவைக் காப்பதிலேயே
நம் காலம் அழிந்துவிட்டது
இந்த அபத்தமான காலம்தான்
அனிதாவையும் அழித்து விட்டது

நிகழ்கால அரசியல்வாதிகளின்
நியாயமற்ற கையெழுத்துக்கள்தான்
எதிர்கால யுகத்தின் அழிவை

மேலும்

சில கோபமான கோபங்கள் வெடி குண்டுகளை வீசுகின்றன, சில நியாயமான கோபங்கள் கவிதைகளை வீசுகின்றன. கோபத்தின் உச்சமும் நியாயத்தின் எச்சமும் வெளிப்படுகிற கவிதை இது - எம் எஸ் முத்துகிருஷ்ணன் 11-Apr-2018 6:20 am
அவளது இறுதி நொடிகள் அனுபவித்த வேதனையை நினைத்துப்பார்த்தால் மனமும் பித்தாகி போகிறது. ஒரு ஏழையின் திறமையை இந்த சமுதாயம் கல்லறைக்குள் தான் ஆதரிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2017 1:09 am
m s muthukrishnan - விஜயகுமார் நாட்ராயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2018 1:42 pm

பார்வையால்
வருடிக்கொண்டிருக்கிறாள்
என நம்பித்தான்
கண்மூடிக்கிடந்தேன்
பாதகத்தி
திருடிக்கொண்டாள்
என் இதயத்தை.

மேலும்

கல்யாணத்திற்கு அப்புறமும் காதல் கவிதை எழுதுவது நிறையப்பேருக்கு முடிவதில்லை வாழ்த்த மறந்து ஆச்சர்யப்படுகிறேன் - எம் எஸ் முத்துக்கிருஷ்ணன் 10-Apr-2018 7:28 pm
ரகசியமான திருட்டுத்தனத்தில் உள்ளங்கள் சிறைப்பட்டுக் கிடக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jan-2018 6:20 pm
m s muthukrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2018 5:06 pm

வீட்டுக்கு வெளியில்
ஒரு மரம் நட்டு வையுங்கள்.
வீட்டுக்கு உள்ளே இருக்கும் நாம் யாரும்
நாளைய பூமிக்கு பயன் படப்போவதில்லை
வெளியில் வைக்கும் ஒன்றாவது
நம் பெயர் சொல்லட்டும்

மேலும்

மனிதர்களுக்குத் தேவையான காற்றையும், நிழலையும் மரம் தருகிறது. மரத்திற்குத் தேவையான அன்பையும், ஆதவரையும் இந்தக் கவிதை தருகிறது. இது போன்ற கவிதைகள்தான் மரத்திற்க்கு OXYGEN 11-Apr-2018 6:28 pm
நன்று... 10-Apr-2018 11:30 pm
m s muthukrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2018 4:28 pm

அணை கட்டி கட்டி அடித்துக் கொண்டது போதும்
ஆறுகளை இயல்பாய் ஓட விடுங்கள்
பயிர்களுக்கும் பலன் கிடைக்கும்
பறவைகளுக்கும் பலன் கிடைக்கும்
இப்போதெல்லாம் அணைகளை
திறந்து விட்டால்
தண்ணீர் வருவதற்கு பதில்
தகராறு தான் வருகிறது
அணைகளை உடையுங்கள்
ஆறுகள் இயல்பாய் ஓடட்டும்

மேலும்

தண்ணீரைத் தேக்கத்தான் அணைகள் கட்டினார்கள். இன்று செந்நீரைத் தேக்க அணைகள் தேவைப்படுகிறது. ஆறுகளை ஓடவிட்ட காலத்தில் ஆறு தல வரலாறு கூறினார்கள். ஆனால் இன்று ஆறுகளை மூடிவிட்ட காரணத்தால் ஆறுகளுக்கே ஆறுதல் வரலாறு கூறுகிறார்கள். இந்தக் கவிதையில் வரும் வார்த்தை ஈட்டிகளால் அணைகள் உடையட்டும் ஆறுகள் பாய்ந்து வந்து நமக்கு ஆறுதல் கூறட்டும். 11-Apr-2018 6:40 pm
m s muthukrishnan - விஜயகுமார் நாட்ராயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2017 4:16 pm

தாமஸ் எடிசன்
ரைட் சகோதரர்கள்
பெஞ்சமின் பிராங்க்ளின்
சார்லஸ் பாபேஜ்
அலெக்சாண்டர் பெல்
கலிலியோ
ஐன்ஸடீன்
அப்துல் கலாம்
நீங்கள் அனைவரும்
மீண்டும் பிறந்து வாருங்கள்
மானுடம் உண்பதற்கு
தொழில்நுடப உதவியால்
இரும்பு சாதனங்களைக் கொண்டு
எதையாவது கண்டறிந்து
தாருங்கள் - காரணம்
இனி எங்கள் நாட்டில்
வெள்ளாமை இருக்காது - ஏனினில்
வேளாண்மையே இருக்காது.

இந்த உலகில்
வேளாண்மை இருந்தவரை
வேலையின்மை இருந்ததில்லை - ஆனால்
இங்கே உள்ளவர்கள்
விவசாய நிலங்களின் மீது
கட்டிடங்களையும்
விவசாயிகளின் மீது
சமாதிகளையும்
எழுப்பிவிட்டார்கள்

குளங்களை மூடிவிட்டார்கள்
நிலங்களை மாற்றிவி

மேலும்

விவசாயத்தில் சவசாயம் பூசுகிறார்கள் , அற்புதமான வரிகள், அற்புதமான கவிதை, சுடாத கவிஞருக்குள்ள ஒரு சுட்ட கவிதை - எம் எஸ் முத்துகிருஷ்ணன் 23-Jan-2017 11:44 am
கசப்பான உண்மை, நெஞ்சருக்கும் வேதனை, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - மு.ரா. 22-Jan-2017 5:19 pm
m s muthukrishnan - விஜயகுமார் நாட்ராயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2015 3:03 pm

ஜெயினுலாவுதீன் பெற்றெடுத்த மகன்
ஜனங்களிடம் பெயரெடுத்த மகான்.

கருணையோடு மாணவர்களுக்குக்
கல்வி நீர் கொட்டிய அருவி
திக்கற்றுத் திரிந்த இளைஞர்களுக்குத்
திசை காட்டிய கருவி
தீராத பழியைத் தேடிக்கொண்டான் எமன்
உன்னிடம் இருந்து உயிரை உருவி.

சுமைதாங்கியாய் நாட்டின் கனவைதாங்கி
இமை மூடியது இந்த இமயம்
சிறப்பான மாமனிதரின் இறப்பால்
இருண்டு போனது எங்கள் இதயம்.

நபிகளாரிடம் நல்வழியைக் கற்றாய்
அடிகளாரிடம் அறத்தையும் பெற்றாய் - எனவேதான்
உலகம் அழுகிறது உன்மீது பற்றாய்.

இவர் அறிவு பயன்பட்டது கல்விக்கூடங்களில்
கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும்
இவர் அறம் உந்துசக்தியாய் இருந்தது

மேலும்

நல்ல கவிதை விஜி புத்தகமாக போடும் பொது இதை முதல் கவிதையாக போடுங்கள் முடிந்தால் இந்த கவிதையை மட்டும் ஒரு புத்தகமாக போடுங்கள் - முத்துகிருஷ்ணன் 07-Nov-2016 10:17 pm
m s muthukrishnan - விஜயகுமார் நாட்ராயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2015 2:28 pm

மது,
மாது,
சூது ,
இவைகளை
விட்டவன் சாது
தொட்டவன் சேது

மேலும்

சூப்பர் வரிகள் சிறிது செய்தி பெரிது 22-Dec-2015 9:40 am
நல்லாயிருக்கு கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2015 2:36 pm
மேலும்...
கருத்துகள்

மேலே