சவசாயம்

தாமஸ் எடிசன்
ரைட் சகோதரர்கள்
பெஞ்சமின் பிராங்க்ளின்
சார்லஸ் பாபேஜ்
அலெக்சாண்டர் பெல்
கலிலியோ
ஐன்ஸடீன்
அப்துல் கலாம்
நீங்கள் அனைவரும்
மீண்டும் பிறந்து வாருங்கள்
மானுடம் உண்பதற்கு
தொழில்நுடப உதவியால்
இரும்பு சாதனங்களைக் கொண்டு
எதையாவது கண்டறிந்து
தாருங்கள் - காரணம்
இனி எங்கள் நாட்டில்
வெள்ளாமை இருக்காது - ஏனினில்
வேளாண்மையே இருக்காது.

இந்த உலகில்
வேளாண்மை இருந்தவரை
வேலையின்மை இருந்ததில்லை - ஆனால்
இங்கே உள்ளவர்கள்
விவசாய நிலங்களின் மீது
கட்டிடங்களையும்
விவசாயிகளின் மீது
சமாதிகளையும்
எழுப்பிவிட்டார்கள்

குளங்களை மூடிவிட்டார்கள்
நிலங்களை மாற்றிவிட்டார்கள்
மண்புழுக்களை மண்ணாக்கிவிட்டார்கள்
மணலையும் தோண்டிவிட்டார்கள்
விவசாயம் சார்ந்த அனைத்தையும்
அழித்து வருகிறார்கள்
பாவம் அவர்களுக்குத் தெரியுமா?
விவசாயத்தை அழிப்பதன் மூலம்
அவர்களையே அவர்கள்
அழித்துக்கொள்கிறார்களென்று - ஏனெனில்
உலகின் அனைத்து உயிர்களும்
விவசாயத்தை மட்டுமே
சார்திருப்பதுதான் உண்மை

இவர்கள் இயற்கையையே
இயற்கை எய்த வைக்கிறார்கள்
விவசாயத்தின் மீது
சவசாயம் பூசுகிறார்கள்

விவசாய மனிதர்களுக்கு
தற்கொலை செய்யத்தெரியும்
விவசாய மாடுகளுக்கு
அது தெரியாதென
அவைகளை அழிப்பதற்காக - நம்
பண்பாட்டின் அடையாளமான
ஜல்லிக்கட்டையும்
தடை செய்து விட்டார்கள்

விலங்காபிமானம்
என்ற பெயரில்
மனிதாபிமானத்தை
மரிக்கச்செய்யகிறது
PETA எனும்
அமெரிக்க அமைப்பு

சர்க்கரை போல்
பால் தரும்
நாட்டு மாடுகளை
நசுக்கிவிட்டு
சர்க்கரை நோயை
சன்மானமாய்க் கொடுக்கும்
JERCY மாடுகளை
ஜனங்களிடம் திணிக்க
திட்டங்கள் வகுக்கிறது - இந்தப்
பிரத்யேக அமைப்பு

பீட்டாவின் வஞ்சத்தை
எதிர்ப்பு எனும்
தோட்டாவால் துளைக்க
அனைவருக்கும் விடுப்போம்
அன்பான அழைப்பு

தாயின் பாலைவிட அதிகநாட்கள்
எங்களுக்கு அமுதமாய் இருந்தது
இந்த மாட்டின் பால் - எனவேதான்
எங்கள் உயிரையும், உறவையும் விட
அதிகமான நேசத்தையும், மதிப்பையும்
கொண்டிருக்கிறோம்
இந்த மாட்டின்பால்

கருணைக்கண்ணற்ற சிலரால்
கலாச்சாரம் ஆடுகிறது ஊசல்
மனிதத் தன்மையற்ற அவர்களால்தான்
நாட்டில் இத்தனை பூசல்
அவர்கள் உணர வேண்டியது
ஒன்றே ஒன்றுதான்
அது என்னவென்றால்
வாடிவாசல்தான்
மாடுகளுக்கும்
மனிதர்களுக்கும்
வசந்தவாசல்

உலகத் தமிழர்களே
ஏற்று நடத்துங்கள்
ஏறு தழுவுதலை - நாம்
உயிரினங்களை வதைக்கவில்லை
உன்னதங்களை விதைக்கிறோம்

தொன்தமிழ் மரபுகளுக்குத்
தொண்டுகள் செய்வோம் - நம்
தொப்புள் கொடி உறவுகள்
தொன்று தொட்டு வாழ
தொழுகைகள் புரிவோம்
-------------------------------------------
எழுத்து : விஜயகுமார்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (22-Jan-17, 4:16 pm)
பார்வை : 169

மேலே