ஜல்லிக்கட்டு காலம்

அன்று..
ஜல்லிக்கட்டுக்கு போறேன்..!
என்ற மகனிடம்,
பார்த்து காளையை அடக்கு..
உன் வீரத்தை பறைசாற்று...
வெற்றியுடன் திரும்பி வா மகனே !
என்றாள் வீர தமிழ்தாய் ...

இன்று..
ஜல்லிக்கட்டுக்காக
போறேன் !
என்ற மகனிடம்,
திமிர்ப்பிடித்த பீட்டாவை அடக்கு...
தடைகளை தகர்த்து ஒடுக்கு !
நம் தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டிட ,
தமிழ் குடியானவர்களின்
ஜல்லிக்கட்டுடன் திரும்பி வா மகனே !
என்றாள் விவேக தமிழ்தாய்...

எழுதியவர் : க வெ சரவணகுமார் (22-Jan-17, 3:22 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR.K.V.
பார்வை : 173

மேலே