காற்று

ஆண்டவனுக்கு தெரிந்திருக்கிறது,
அதனால் தான்
அமெரிக்கா காற்று என்றும்
ஆந்திரா காற்று என்றும்
இங்கிலாந்து காற்று என்றும்
இந்தியா காற்று என்றும்
பிரிக்க முடியாதபடி
சேர்த்து வைத்து விட்டான்.
இல்லாவிட்டால் ஏகப்பட்ட போராட்டங்களால்
நாடுகள் நாசமாய் போயிருக்கும்,
அதிலும் சிலபேர் மட்டும் காற்றை
சேர்த்து வைத்து சில்லறை பார்த்திருப்பார்கள்.

எழுதியவர் : எம் எஸ் முத்துகிருஷ்ணன் (21-Jun-18, 7:17 pm)
சேர்த்தது : m s muthukrishnan
Tanglish : kaatru
பார்வை : 274

மேலே