இயற்கை

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால்
அது நல்கிடும் நமக்கு நல்லவையெல்லாம்
மீறி இயற்கையுடன் பகைகொண்டு போர்
தொடுத்தால் நம்மை ஆழ்த்திடும் அழிவாம்
ஆழ்கடலில் , இதை நான் சொல்வேன் பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்கள் அறிந்திடல் வேண்டும்
அவர்கள் சாலையெல்லாம் செடிகள் நட்டு
நாளை மாமரங்களாய் அவை வளர வழிசெய்திடல்
வேண்டும்; காடுகளை பேணி காத்திடல் வேண்டும்
நீர் நிலைகளையும் குளங்களையும் மாசின்றி
வைத்துக்கொள்ளல் வேண்டும்; மாசில்லா காற்று
உயிரினங்களைக் காக்கும் வளரும் ஆரோகியாமும்
தரும் அதனால் வாயு மண்டலத்தில் மாசு
படியா வைத்திருக்க கூடியவரை முயலவேண்டும்
நேற்றுபோல் குயில்பாடும் எழில் சோலைகளும்
கயல்கள் துள்ள கொக்கும் நாரையும் சேர
வளம்பொங்கும் நீர்த்தேக்கங்கள் சாய்ந்த
நெல் வயல்கள் பெருகவேண்டும் - வயல்கள்
ஒருபோதும் வஞ்சகர்கள் கைகளில் சிக்கி
மனைகளாய் மாடி வீடுகளை மாறக்கூடாது
இயற்கை தராசில் இயற்கையின் நன்மைகள்
எப்போதும் அமிழ்ந்து இருத்தல் வேண்டும்
நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்யும்
இயற்கைக்கு மாறான குறைகள் தூக்கி ....
நமது பூமியின் தலைவன் ஆதவனைப்
போற்றி வணங்கிடுவோம் அவள் ஒளியின்றி
மண்ணில் எது ஜீவன் -சந்திரனையும் துதிப்போம்
இருளைபோக்கிடுவான் குளிர் தந்து இரவில் அவன்
இயற்கை அன்னை நமக்கெல்லாம் தாய்
நம் குறைகளையெல்லாம் தாங்கி சுமப்பவள்
அவள் என்று மறவாமல் வாழ்ந்திடுவோம்
நம் சிறுவருக்கெல்லாம் இதை சீராக
ஓதிடுவோம் ...வாழ்க இயற்கை வாழ்கவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jun-18, 9:01 am)
Tanglish : iyarkai
பார்வை : 623

மேலே