ஒரு கவிதையின் இனிமையில் தேன்துளிகள் சிந்தும்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு கவிதையின் இனிமையில்
தேன்துளிகள் சிந்தும்
ஒரு கற்பனையின் அழகில்
நீலவானம் விரியும்
ஒரு பூவின் மலர்ச்சியில்
காலையின் வாசல் திறக்கும்
ஒரு அருவியின் பொழிவில்
உடல் மகிழ்ச்சியில் நீராடும்
ஒரு நதியின் வருகையில்
பசுமையின் கனவு நனவாகும்
ஒரு தனிமையின் மௌனத்தில்
மரநிழலும் உனை ஞானவழி நடத்தும் !