அழியாத ரணம்

வீதியோரத்தில் வானளாவ உயர்ந்து
பச்சைப் பசேல் என்ற தோற்றத்துடன்
பசுமை மிகு குளிர்ச்சியுடன்
அழகிய நிழல்தரும் மரம் ஓன்று
பார்ப்பவர் அதன் நிழலில்
ஒதுங்கி சற்று இளைப்பாறி
ஓய்வெடுத்து கதைகள் பல பேசி செல்வதையும்
வாகனங்கள் நிறுத்துவதையும்
பார்க்கப் பொறுக்காத காற்று
வைதா எனும் புயலாக
அரக்க குணம் கொண்டு
அந்த அழகிய மரத்தை அப்படியே
வேரோடு சாய்த்து விட்டது
அத்தோடு விடாத புயல்
நாட்டையும் அழகிய மரங்களையும்
ஒருகை பார்த்துவிட்டுத் தான் அடங்கியது
அதன் வெறித்தனம் அந்த அழகிய மரத்தை
சாய்த்து விட்டதை நினைத்தால்
இப்பவும் ஒரு வேதனை மக்கள் மனதில்
அதன் பக்கமுள்ள வீடெல்லாம்
இப்பவும் வெட்டவெளியாக தெரிகிறது
இனியும் அங்கே அந்த மரம் எங்கே /
காலம் கடந்தாலும் அந்த நிழல் மீண்டும் வருமா/
காற்றிலும் அரக்கன் உண்டு
என்பதை நிரூபித்து விட்டாய் காற்றே
காற்றே நீ செய்த வடுக்கள்
மக்களின் மதில் அழியாத ரணமாகி விட்டது

எழுதியவர் : பாத்திமாமலர் (22-Jun-18, 11:13 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : aliyatha ranam
பார்வை : 133

மேலே