காபியின் காதலன்

காபியே என் ஹாபியே -என்
காலையின் துவக்கமும் நீயே
மாலையின் மயக்கமும் நீயே

உன்னைப் அருந்தும்போது
உதடுகள் சூடாகின்றது
உள்ளமோ குளிர்கின்றது

இதழ்கள் கசக்கின்றது
இதயமோ இனிக்கின்றது

ஆவி பறக்கும்போதே
ஆவல் பிறக்கின்றது

காபி கோப்பையில் சர்க்கரையைக்
கரைக்கும்போதே - அந்த
அமுதக்கடலில் நானும் நீந்தி
அக்கரையைக் கடக்கின்றேன்

பருகும்போதெல்லாம்
பழைய காதலியைப் பார்த்த
பரவசமும், புத்துணர்ச்சியும்
இலவசமாய் இணைகிறது

உன்னை அருந்தவே
எழுந்து வருகிறேன்
உன்னை அருந்தியே
உறங்கச் செல்கிறேன்

ஞானம் பிறக்க
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கணம்
புத்தனுக்கு போதிமரம் - இந்தப்
பித்தனுக்குக் காபி மனம்

எழுதியவர் : VIJAYAKUMAR NATRAYANM (1-Oct-21, 9:46 am)
Tanglish : cabiyin kaadhalan
பார்வை : 59

மேலே