களவு போன இதயம் பெற்றேன்
காதலில் விழ வைத்து
கண்ணீரில் கரைய வைத்து
என்னை உயிரோடு
எரிய வைத்து சென்ற என்னவளே!!!
நீ இப்போது எங்கே...?
இனி உன்னுடன் தான்
என் வாழ்க்கை என சொன்ன
அந்த உதடுகள் இப்போது எங்கே...?
அரைநிமிடம் பேசாமல் போனாலும்
எனக்காக கண்ணீர் சிந்தும்
அந்த விழிகள் இப்போது எங்கே...?
நெடுந்தூரம் என் விரல் பிடித்து
என்னுடன் நடந்து வந்த
அந்த நிழல்கள் இப்போது எங்கே..?
உந்தன் மடி சாயும் நேரமெல்லாம்
எந்தன் தலை கோதும்
அந்த விரல்கள் இப்போது எங்கே..?
நான் கலங்கி நிற்கும்
போதெல்லாம் தோள் சாய்த்து
ஆறுதல் சொன்ன அந்த
வார்த்தைகள் இப்போது எங்கே...?
கோபத்தால் பற்றி எறியும்
என் கன்னங்களை
கோடி முத்தங்களை கொண்டு
அணைப்பாயே..
நீ கொடுத்த அந்த முத்தங்கள்
இப்போது எங்கே..?
என்னிடமிருந்து நீ வாங்கிய
என் இதயம் இப்போது எங்கே...?
நீ எங்கே பெண்னே...?
என்னை பிரிந்து சென்றாயோ
இல்லை!!!
இல்லை!!!
பிரிவு என்பது நிரந்திரமில்லை
அதனால் தான் என்னை
முழுவதுமாய்
மறந்து சென்றிருக்கிறாய்..!
வேறு ஒருவனை மணந்து
சென்றிருக்கிறாய்!!!
என் காதலை கொன்ற கையோடு
வேறு ஒருவனின் காதலையும்
கொன்றிருக்கிறாய்..
ஏன்..?
இப்படி இறக்கமற்ற
மனமுடையவளாய் மாறிவிட்டாய்!!!
என் மனதை ஆண்ட ராணியடி நீ..!
ஆனால் இன்றோ
மாண்டு மண்ணோடு மண்னாகிவிட்டாய் என் மனதில்..!
நான் உந்தன் காதோரம் சொல்லிய
கவிதைகளெல்லாம் தற்கொலை
செய்து கொண்டன..
பெண்னே,
உனை வர்ணித்து எழுதிய
வார்த்தைகளெல்லாம் கண்ணீர்
வடிக்கின்றன ...
கவிதைகள் என்றாலே பொய்தான்
அந்த கவிதையே சொல்லும் ஒரு
பொய் என்றால் அது நீ தான்!!!
காலம் கடந்து போனது..
காதலும் கடந்து போனது..
என் இதயத்தை
திரும்ப பெற்றவனாக,
❤சேக் உதுமான் ❤