பொம்முக்குட்டி

தொட்டித்தீவில் இருக்கும் என்
பொம்முக்குட்டியே..
கன்னக்குழியழகியே..
முழிக்கும் முழியழகியே ..
பொக்கைவாய் சிரிப்பழகியே ..
உன் தீவில் எனக்கும்
இடமுண்டா ஓர் ஓரத்தில் நானும் உறங்கிட ....
தூக்கத்தில் நீயும் சிரிக்கையில்
கடவுளும் வருவாரோ உன் கனவில்
வந்தால் என் வேண்டுதலை எனக்காக
நீயும் சொல்வாயா...
'அம்...ம்ம்..மா....'என்று நீயும் அழைக்கையில்
எல்லா கவிதையும் தோற்றுப்போகிறது...
அப்படி நீஅழைக்கவே காத்திருப்பேன்
தொட்டித்தீவின் எல்லையிலே...

எழுதியவர் : ரேஷ்மா (31-Aug-18, 2:17 pm)
சேர்த்தது : Reshma
பார்வை : 3708

மேலே