மணமகனே கொஞ்சம் கேளு

மனைவியோடு சேர்ந்து வாழும் கணவா
அவ மனசெல்லாம் நெறஞ்சிருப்பே கனவா- அதனால
பார்த்துக் கொஞ்சம் நடந்துக்கடா படவா

மாமனாரத் தகப்பனப் போல் நடத்தணும்
மாமியாரேத் தாயைப்போலே நினைக்கணும்
உறவுகளை எப்போதுமே துதிக்கணும் - அவங்க
உணர்வுகளை நீயும் கொஞ்சம் மதிக்கணும்

அம்மா வீட்டுக்கு அவளும்போனா துள்ளாதே
அதுலே ஆனந்தம் இருக்குதுன்னு சொல்லாதே
உண்மையைத்தான் வாயில்போட்டு மெல்லாதே - அப்புறம்
அகப்பட்டு நீ முழிச்சிக்கிட்டு நில்லாதே

மகிழ்ச்சிக்காக மதுபாட்டிலைத் தூக்காதே
மனைவி மனசை கடும்சொல்லால் தாக்காதே
மச்சினங்கிட்டத் தட்சினையெல்லாம் கேக்காதே
கொழுந்தியால ஓரக்கண்ணால் பாக்காதே

அக்கா தங்கை துன்பமெல்லாம் மாறணும்
அதிலிருந்து அவங்க கரை சேரனும்
மென்மையோடு பெண்மையதை ஆளனும்
பெண்ணை மதித்த பாரதிபோல் வாழனும்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (31-Aug-18, 4:27 pm)
பார்வை : 131

மேலே