பிரிவின் இசை
![](https://eluthu.com/images/loading.gif)
களவுக் காலத்தில்...
தலைவன் தலைவியைச் சந்திக்க
எதிர்ப்படும் முன்பு தலைவி
கேட்டவை கலக்கும் கானா இசை!!!
கற்புக் காலத்தில்...
தலைவன் தலைவியைக் கூடி
உறவாடிய பின்பு தலைவி
மயக்கும் மெல்இசை!!!
பிரிவுக் காலத்தில்...
தலைவியைத் தலைவன் பிரிந்த
தனிமைத் தருணங்களில் நேசித்த
மெல்இசை தலைவிக்குக் கொல்இசை!!!