செல்லப்பாண்டி செ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்லப்பாண்டி செ
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  30-Apr-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Oct-2018
பார்த்தவர்கள்:  199
புள்ளி:  9

என்னைப் பற்றி...

பாரதியை நேசிப்பவன்..
பாரதியை நாம் கொண்டாடும்போது தமிழ் தன்னைத்தானே கொண்டாடிகொள்கிறது....

என் படைப்புகள்
செல்லப்பாண்டி செ செய்திகள்
செல்லப்பாண்டி செ - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2018 10:32 am

காதல் என்றாலே விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது...

காதலை பள்ளியில் அனைத்து பாட ஆசிரியர்கள் விளக்கம் அளிந்திருந்தால் இவ்வாறு இருக்கலாம்....

தமிழ்...தனக்குள் அவளையும் அவளுக்குள் தன்னையும் தொலைத்துவிட்டபின்,கண்டெடுத்த பொ ருள்‌... காதல்

கணிதம்....இரு வேறுபட்ட ஆன்மாக்களின் தொடர்பை விளக்கும் சூத்திரமே ... காதல்

ஆன்மீகம்....இரு வேறுபட்ட ஆன்மாக்களின் ஒரே தேடல் .... காதல்

அறிவியல்... உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் விளையாடும் புதிர் நிரம்பிய ஆனந்த விளையாட்டு... காதல்

மேலும்

செல்லப்பாண்டி செ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2018 9:42 pm

நான் யார்????

இந்த அழகிய பிரபஞ்சத்தில், ஆளில்லா கானகத்தில் ஆனந்தகூச்சலிடும் சிறு குருவியா????

கிராமத்தின் பசுமையான புல்வெளிகள்நடுவே மாட்டுவண்டிப்பாதை அழைத்துச்செல்லும் அழகிய உலகத்தில் அழகுற பயணிக்கும் சுட்டிச் சிறுவனா?????

தன்னந்தனிமையில் துரத்தும் இனிமையில் விடியலின் புதுமையில் மண்ணுக்குள் துளிர்விடும் புல்லின் சிறுநுனியா????

மேலும்

செல்லப்பாண்டி செ - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2018 7:58 pm

உன் பெயர்தான் என்
கவிதைக்கு தலைப்பாகுமானால்,என் வாழ்க்கையை அந்த கவிதைக்கு ஏற்ற
வரிகளாக நான் தொடுப்பேன்...

உன்னை நேசிக்கும் போது தான்
என் வாழ்க்கையின் ஆனந்தத்தை நான் உணர்ந்தேன்...

உன்னை நான் நேசித்துகொண்டிருக்கும் வரையில் என்னிடம் இருந்து உன்னை ,உன்னால் கூட பிரிக்க முடியாது..

உனக்காக ஒரு வாழ்க்கையை என்னிடம் இருந்து கொடுக்கமுடியாவிட்டாலும், எனக்காக ஒரு வாழ்க்கையை உன்னிடம் இருந்து நிச்சயம் எடுத்து கொள்வேன்... ஏனென்றால் நீ எனக்கு ரொம்ப முக்கியம் என் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ நீ தேவை...நீ மட்டும் தான் தேவை...

நீ தேவை என்றால் நான் வேண்டுவது உன் உருவமல்ல
என்னுடன் வாழ உன் நினைவுக

மேலும்

செல்லப்பாண்டி செ - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2018 5:54 pm

உலகின் முதல் மொழி.
தமிழன்னைக்கே உரித்தான தனிமொழி.
பாரதி எனும் பைந்தமிழனின்
காதல்மொழி
மாற்றான் பலரும் சுவைத்திட்ட
கனிமொழி.
மல்லிகை மணம் வீசும் மதுரையின் மணிமுடி.
உலகின் தோற்றத்துக்கு தோற்றமாய் விளங்கும் வேர்மொழி.
உலக மொழிகளை ஈன்றெடுத்த
தாய்மொழி.
பழமைக்கு பலம் சேர்த்து புதுமைக்கு உரம் சேர்க்கும் சீர்மொழி.
இத்தனை செம்மையான பண்புகள் செம்மையாக உள்ள
செம்மொழி.... அதுதான் தமிழனின் உயிரில் ஓடும் உயிர்மொழி........ தமிழ் மொழி
தமிழ் மொழி தமிழ் மொழி....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே