என் காதலிக்கு
உன் பெயர்தான் என்
கவிதைக்கு தலைப்பாகுமானால்,என் வாழ்க்கையை அந்த கவிதைக்கு ஏற்ற
வரிகளாக நான் தொடுப்பேன்...
உன்னை நேசிக்கும் போது தான்
என் வாழ்க்கையின் ஆனந்தத்தை நான் உணர்ந்தேன்...
உன்னை நான் நேசித்துகொண்டிருக்கும் வரையில் என்னிடம் இருந்து உன்னை ,உன்னால் கூட பிரிக்க முடியாது..
உனக்காக ஒரு வாழ்க்கையை என்னிடம் இருந்து கொடுக்கமுடியாவிட்டாலும், எனக்காக ஒரு வாழ்க்கையை உன்னிடம் இருந்து நிச்சயம் எடுத்து கொள்வேன்... ஏனென்றால் நீ எனக்கு ரொம்ப முக்கியம் என் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ நீ தேவை...நீ மட்டும் தான் தேவை...
நீ தேவை என்றால் நான் வேண்டுவது உன் உருவமல்ல
என்னுடன் வாழ உன் நினைவுகள் இருந்தாலே போதும்....
உன் மீதான என் அன்பு ,ஒரு தாயின் மீதுள்ள குழந்தையின் அன்பைப் போல , சொல்லமுடியாவிட்டாலும் அவசியம் உன் அன்பு எனக்கு முக்கியம்.... இறுதியாக நான் சொல்லவருவது நான் உன்ன ரொம்ப காதலிக்கிறேன்....
நாம காதல சொன்னமா சொல்லலியா என்பது முக்கியமில்லை ஆனா உண்மையா உயிராய்
ஒருத்தங்கள நேசித்தோமா என்பதுதான் முக்கியம்....அர்ச்சனா உனக்காக...