காதல்
நானும் அவளும்
காதலர்கள் , வெறும்
உடலால் அல்ல
உள்ளதால், உணர்வால்
நாந்தான் அவள்
அவள்தான் நான்
என்று உடலுக்கப்பால்
உயர்ந்திருக்கும் உறவு
எங்கலுறவு.......
என்னை பிரித்துவிட்டார்கள்
அவளிடமிருந்து , பாவிகள்
இவர்களுக்கு நாங்கள்
ஒரு தீங்கும் நினைக்ககூடவில்லையே
நான் அவளை, அவள் என்னை
விரும்புவது தவறா
இவர்கள் ஏன் எங்களை பிரிக்க விரும்பினாரோ
தெரியலையே.....ஜாதி எங்களை சேர்க்கவில்லை
எந்த மதமும் எங்களை சேர்க்கவில்லை
கள்ளமில்லா எங்கள் மனமே
ஒன்றை ஒன்று நாடி தேடி சேர்ந்துவிட்டன
அவள் மனதில் நான்
ஏன் இதயம் அவள் இதயத்திற்குள்
என் மனதில் அவள், அவள்
என் இதயத்திற்குள்.......
இதோ என் இதயத்திற்குள் அவள் இதயம்
எடுத்துச்செல்கிறேன் நான் ........
இதோ இந்த சந்திரனைக் கேட்டால் சொல்லும்
அவள் என்னவள் என் சந்திரன்
சந்திரனின் ஒளியும் குளிரும்
அந்த தூரத்தில் மின்னும் நட்சத்திரங்களுக்கு தெரியும்
அவள் என்னுள் எப்போதும் மின்மினுக்கும் ஓர் தாரகையே என்று
அந்த பகலவனைக் கேட்டால் சொல்வான்
என்னவள் நான் தேடும் காளைக்கு கதிரவன்
அந்த தோடு இளஞ்சூடு அவள் ஸ்பரிசத்தில்
இதோ அவள் இதயம் நான் எடுத்து செல்கின்றேன்
இந்த எங்களை பிரித்தவர்க்கு தெரியாது
இந்த ரகசியம் ........
இவர்கள் யாரைப் பிரிக்க பார்க்கிறார்கள்!
ஓ, எங்கள் உடலையோ.................
பிரிக்கட்டுமே தாராளமாக
இவர்களுக்கு தெரியாது அதில் அவள் ஜீவன் என்னிடத்தில்
என் ஜீவன் அவளிடத்தில்..........................
எங்கள் உடலைப்பிரித்தாலும்
ஜீவனைப் பிரித்தல் முடியாது
ஜீவனுக்கு ஏது ம்ரித்யு ................
எங்கள் காதல் எங்கள் ஜீவன்
இதுதான் உண்மை......
எங்கள் காதல் பயணம் தொடரும்
உடல் பிரிந்தாலும்
அமரர் உலகில்
அவள் இதயம் என் இதயத்திற்குள்...
இதோ போகிறேன் நான் அத்துடன்