மனிதா நீ தலைகுணிவாய்

வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்று
நாட்டிற்கும் அதை செய்து தலைநிமிரு
ஆட்டுமந்தைப்போல் புல்தின்றுஅலைந்திடாது
மதிக்கொண்டு முறைப்படுவாய் மானிடனே

புவிவாட்டம் கொள்ளும் மற்றும் நீள்கடலும்
தடுமாற்றம் கொள்ளுதடா பல்லுயிரும்
உனதாட்டம் கொண்டு வெறுத்து நீஉமிழும்
மற்றும்மோட்டார் கரிமள வாயுத்துகளும்,
போட்டால் யாருக்கேட்பாரென்று,
நீபோட்ட நெகிழியெலாம்
முதுகேறிகுத்துவதை அறியாயோ?

மரமாகி கனிக்கொடுத்த விதைகளுக்குள்
தரமாக்க கலப்படத்தை நீசெய்தாய்..
உரமதுக்கும் இயற்கையோடு சேராது
உயிரியல் வளையத்தை உருக்குலைத்து விட்டாய்

உயிர்த்தோற்றம் முதலென்பது யாதுணர்ந்து
அதைதேற்ற வழிவகை செய்வாயோ
இதில்மாற்று கருத்தேதும் நீகொண்டால்
ஆற்றும் செயலெல்லாம் அறிவிளியே...

காற்றை மரமழித்து நீகெடுத்தாய்..
மரத்தை அழித்தபலன் மழைக்கெடுத்தாய்
நாற்றை செப்பனிட மருந்தளித்தாய்
மருந்து அளித்தபலன் மண் புழு அழித்தாய்

நாற்றம் வீசும் நறுமலருக்கு
பரவசம் ஊட்டும்வண்டுகளை காணவில்லை
பரவசம் ஊட்டும்வண்டுகளை அழித்தபலன்
மகரந்தச் சேர்க்கையின்றி மலடாயிடுத்தே...

வேற்று கிரகம் தேடிநீபோனாலும்
தோற்று விக்கமுடியுமா வேறுயிரை
சீற்றம் கொண்டு இயற்கை எழுந்து வந்து
உனை
தூற்றும் மனிதனே நீ தலைகுனிவாய்!...

எழுதியவர் : மதனா (28-Feb-20, 3:43 pm)
சேர்த்தது : மதனா
பார்வை : 175

மேலே