இயற்கை

பௌர்ணமி நிலவு பூரண நிலவு
நீலவானில் உலவு ...... உலவி
குன்றின் மேல் வந்து நின்றது நிலவு
குன்றிலிருந்து புல்வெளி நோக்கி ஓடி வந்தது
சிற்றருவி துள்ளித்துள்ளி நடமாடி வரும்
மலைவாசி இள நங்கையைப்போல்
ஓடி வந்து பள்ளத்தில் வீழ்ந்த அருவி நீர்
பார்க்கையிலே பிரிந்தது பல
அழகிய நிலவு தந்த நிலவு வில்லாய்
மண்ணில் மிளிரும் நிறபேத வில்லாய்
இரவில் நான் கண்ட மண்ணில் வந்த வானவில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Feb-20, 6:43 pm)
Tanglish : iyarkai
பார்வை : 543

மேலே