கொரோனாவின் குரல்

கொரோனாவின் குரல்

நாளையும் உனக்கு வேண்டுமென்றால்
நாளுக்கு பலமுறை கைக்கழுவு
சாலையில் கூட்டத்தில் நானிருப்பேன்
குறைந்தது மூன்றடி நீநழுவு
ஆலயம் மசூதி அலுவலகம்
அனைத்திலும் நானிருப்பேன் அண்டாதே
தேவைகள் இருந்தால் மட்டுமே
தெருவில் நடக்கலாம் மறவாதே

உலகம் உனக்காக மட்டுமே
என்று உவகைகொண்டாயோ மனிதனே
கவலைகள் கொண்ட பல்லுயிரின்
கண்ணீர்த்திவலையால் நான் வந்தேன்
தலைவலி காய்ச்சல் இருமலுடன்
உன்நுரையிரல் கெடுத்து கொன்றிடுவேன்

நின்தும்மல் இருமல் சளிமூலம்
உம்மிலிருந்து வெளிபடுவேன்
எம்மால் இனிநீ இறப்பதற்கு
என்றும் காரணம் நீயேதான்

எனை எதிர்த்து போராட வேண்டுமென்றால்
நோய்எதிர்ப்பு சக்தியுடன் போராடு
எலுமிச்சை நெல்லி பழங்களென
என்எதிரியை என்றும் கொண்டாடு

நானோ உனக்குள்ளே வந்துவிட்டால்
நியே தனியறையில் தங்கிவிடு
தானே நானே போய்விடுவேன்
தடுப்பூசி வரும்வரை ஓய்வெடு

எழுதியவர் : மதனா (8-Apr-20, 10:27 am)
சேர்த்தது : மதனா
பார்வை : 186

மேலே