ஒரு நாள் மட்டும் - உண்மை

காத்துக்காத்தே
கவலைக்கிடமானது வாழ்க்கை.
கூத்துக்கட்டி, குதுகளப்படுத்தி,
கொண்டுபோனார் உங்கள் ஓட்டை.
சேர்ந்ததெல்லாம்! அவர்களிடம்தான்
செலவழிந்தது என்னவோ!
உங்கள் பணம்தான்.

உதிர்ந்தும் மலரும் வியர்வைத்துளிகள்
உங்கள் நெற்றியிலிருந்து மட்டும்.

மறந்தும் கூட பூத்ததில்லை - அவர்கள்
நாவரண்டு எட்சிலே முழுங்கியதில்லை.
கறந்துக் கொள்கிறார் இந்நாட்டை!
வெறும் கண்துடைப்பானது
அவர் வார்த்தை.
எல்லோருமொரே குப்பையென்று
மாறிமாறி ஓட்டளிதீர்
குப்பைமேட்டில் ரோஜாவுண்டு!
குட்டைகுலத்திலும் தாமரையுண்டு!!
ஆராய்ந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பீர்!
அதில் அரசியல் அவர்களுக்கு
கற்றுகொடுப்பீர்!
எல்லாம்சரி என்றுறைப்பீர்!
அப்படியருமில்லை என்றுசொல்வீர்!

தன்னலமற்ற எண்ணமுண்டா
நீயுமொரு தலைவன்தான்.
அண்ணா, காந்தி,காமராசு,
அவரடுத்த பிறவி நீயேதான்.
உன்னிலதற்க்கு தெம்பில்லையா?
ஊரில்தேடு நல்லொருவனை!
உண்மைமட்டுமே அவன்வார்த்தையா?
உயருமடா உன்வாழ்க்கை !


சுத்திநீயும் பாரு! சுதந்திரம்பெற்று நாளாயிற்று!
கூச்சமில்லாமல் சொல்வதென்றால்;
எல்லோரும், ஏட்சிப்பிழைக்கவே முடிந்திற்று.
ஒருவரையொருவர் ஏமாற்றித்தான்
இவ்வூரில் நாமோ! வாழ்கிறோம்.

அதுவரை இந்நாட்டில்
"உண்மையுண்டு "
அதுவும் "ஓட்டுபோட " ஒருநாள் மட்டும் !

எழுதியவர் : மதனா (17-Feb-12, 12:18 pm)
பார்வை : 242

மேலே