ஒரு பிள்ளையின் கதறல்
இலை ஆடிய மரம் எங்கே?
அலை ஆடிய கடல்
எங்கே?
உலை கொதிக்கின்ற
அடுப்பெங்கே?
குயில்களின் இசையும்
ஓலமாய் கேட்கிறதே?
மனிதனின் கதறலில்
கடவுளும் இறங்கிடுமோ?
இறைவா எங்கள் அவல நிலையை மாற்றி எழுதிடுவா(யா)
இல்லை எங்கள் உயிரை மரித்துவிட்டு போ.....
என் வீட்டு தென்னம்பிள்ளை
தோட்டத்து முல்லை
கடைக்குட்டி
எனை கேட்கும்
இங்கு எனை கேட்க
ஒரு நாதி இல்லை
இந்த நிலை
நான் பெற
என்ன விளையாட்டு
இது இறைவா.....
இல்லை யார் செய்த சதி இறைவா.....
இல்லை நான் செய்த விதி இதுவா.....
~ பிரபாவதி வீரமுத்து