வாழ்க்கை சுழற்சி
இரவுக்கும் பகலுக்கும்
இரத்தச் சண்டை
வான்களத்தில்....!
சிந்திக்கிடக்கிறது
இரத்த சிவப்புகள்
அதிகாலை வானில்....!
இரவுக்காக வெற்றியை
பகல்விட்டுக் கொடுத்ததா?
அன்றி
பகலுக்காக வெற்றியை
இரவு விட்டுக்கொடுத்ததா..?
விட்டுக்கொடுப்பதில்
சுழல்கிறது
பூமி வாழ்க்கை..
புரிந்துகொள்.
விட்டுக்கொடுப்பதில்தான்
இனிதாய் சுழலும்
உன்
இல்லற வாழ்க்கை பூமியும்.!