வாழ்க்கை தரும் பாடங்கள்
சமூக நீரோடையில்
என் வாழ்க்கையின்
பயணங்கள்....
நீந்தத் தெரியாமல்
நிலை தடுமாறினேன்.
ஏழ்மைச் சுழல்களின்
இரும்புக்கரஙக்ளில்
என் வாழ்க்கை.
எதிர்கொள்ளத் தெரியாமல்
நொறுங்கிப் போனேன்
இவையிரண்டும்
கற்றுத்தந்தது
எத்தனை கோடி கொடுத்தும்
படிக்க முடியாத
பலவகை
வாழ்க்கைப் பாடங்களை..!