புதைகுழிக்கனவுகள்

இறந்தவர்கள்
தத்தமது
புதைகுழிக்கு மேல்
அமர்ந்திருப்பதாய்
கனவுகள் வருகிறது.

கனவின்றி
நிம்மதியாய் உறங்க
இறைவனை
வேண்டினேன்.
கண்முன் -
தோன்றியவன்
எனது
கனவுகளைத்
தாழிடும் பொருட்டு
ஒரு பூட்டு
செய்து கொடுத்தான்.

பிரச்சனை
என்னவென்றால்
அப்பூட்டுக்கான
சாவியை
ஒரு
கனவுக்குள் ஒளித்துவைத்திருக்கிறேன் கண்டுகொள் என்கிறான்.

புதைகுழி மேலிருக்கும்
சாவியை எடுக்க
யாராவது
என்கனவுக்குள்
துணைக்கு
வாருங்களேன்

- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Aug-16, 10:10 am)
பார்வை : 132

மேலே