நீர் தளும்பும் மழைக்காலம்

மென்மையின் கனத்தை
நினைவுபடுத்துகிறது மழைக்காலம்
குளிர் மெல்லும் சொற்களால்.
நீர் தளும்பும் முற்றத்தில்
ஈரம் காயாத நீர்த் தவளையெனக்
குதிக்கிறது நினைவுகள்.
மகிழ்வின் வெம்மையில்
இளைப்பாற நிழலின்றி
நிலவின் அடிவாரத்தில்
சரிகிறது புனைவுகள்.
அடைகாக்கும் சிறுமனதின்
யாருமற்ற நீள் வீதியில்
என்னை வருடிய இறகின்
மழை கசிய....

உங்கள் படுக்கையின்
சரிந்த ஏடுகளில்
வாசிக்கக் கிடைக்கிறது
அன்பின் மழை.

எழுதியவர் : rameshalam (13-Jun-16, 10:56 pm)
பார்வை : 57

மேலே