அத்துணையும் ஆசையே

பொறுமையற்ற மனிதரே தெரியும் உங்கள் சேதியே!!!
உழைத்தவாழ ஆசையே...
வேர்வை சிந்த யோசனை...
உண்மைப் பேச ஆசையே...
பொய்யை மறக்க யோசனை...
சுத்தம் செய்ய ஆசையே...
அழுக்குபடும் யோசனை...
அள்ளி பருக ஆசையே...
சிந்திவிடும் யோசனை....
வேகம் போக ஆசையே....
விழுந்துவிடும் யோசனை...
உதவி செய்ய ஆசையே...
நேரவிரயம் யோசனை...
காதலிக்க ஆசையே...
ஏமாற்றமே யோசனை...
சிகரம் ஏற ஆசையே...
சறுக்கிவிடும் யோசனை...
அவ்வளவும் ஆசையாய் இருப்பின் யோசனை தான் பெருகிடும்!!!
முடிவும் முயற்ச்சியும் தகுந்தனபின்!!!

எழுதியவர் : திலிபன்.ரா (13-Jun-16, 9:02 pm)
பார்வை : 87

மேலே