வேடம் தரித்து வினை தீர்ப்போர்

உள்ளத்தில் உறைய வேண்டியதை
வெளிவேடத்தில் பகட்டாய் காட்டிடுவோர்

கள்ளத்தனத்தில் கைதேர்ந்த
ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள்!
@@@
பாவங்கள் செய்து கெடுத்துவிட்டு
பரிகாரங்கள் செய்து அச்சம் தவிர்ப்பார்.
@@@
வாய்மையே வெல்லும் என்ற வாக்குரைத்து
பொய்மையில் சுயநலத்தை வளர்த்துக் கொள்வார்.
@@@
காந்தியாய் வாழ்வாரை கேலிபேசி
கொள்ளையடித்து செல்வம் சேர்க்கும் கூட்டாளிகள்
காலைநக்க ஒரு கூட்டம் வைத்திருப்பார்.
@@##
பத்து ரூபாய் லஞ்சமும் வேலையைப் பறிக்கும்
சிறைவாசம் முறைப்படி அழைத்துக் கொள்ளும்!
@@@
கோடிகோடியாயப் பணத்தச் சுருட்டினாலும்
ஆண்டு கணக்கில் வழக்கை இழுக்கடித்தாலும்

கோப்புகள் காணாமல் போய்விட்டாலும்
தீர்ப்புக்கு என்ன வழிகிடைக்கும்?
தடுமாறும் நிலையெல்லாம் ஒதுங்கிவிடும்!

கூட்டல் கழித்தல் பெருக்கல்களில்
குமரப் பிழைகள் தான்தோன்றினால்
கல்லான சிவனும் கண் விழிப்பான்
காப்பது யாரையென்று முடிவு செய்வான்.
#@@@
பக்தி வேடம் தரிப்பவற்குப் பாவமில்லை
நம்பிக்கைக் கவசமே உற்றதுணை.
@@@@@
தாங்கிப் பிடிக்க உலகெங்கும் வலுத்தார் துணைமட்டும் இருந்துவிட்டால்
பாவத்தால் சீறிவரும் தோஷமெல்லாம்
காலைக் கதிரில் இலைமீது
தூக்கம் கலையும் பனித்துளியே!


####
கிறுக்கல்கள்

எழுதியவர் : மலர் (14-Jun-16, 12:20 am)
பார்வை : 106

மேலே