நாட்டுமிராண்டிகள் காலம்
நாட்டுமிராண்டிகள் காலத்தில்
வாழ்க்கைத் துணையானவரைக்
கொல்வதெல்லாம்
ஊடகங்களில் அடிக்கடி நாம் காணும் அச்சுறுத்தும் செய்திகள் என்றறிவோம்.
குடிபோதை தலைக்கேறி வெறியாட்டம் போடும் சிலர்
இரக்கமின்றி இல்லத்து அரசியை
வெட்டிச் சாய்ப்பது போதைவிளையாட்டு.
கூடா நண்பரோடு கூட்டணி அமைத்து கைபிடித்த கணவனை வெட்டி வீழ்த்துவது
தடைக்கல்லைத் தகர்த்தெரியும்
காம விளையாட்டு!
நாட்டுமிராண்டிகளுக்கு
போதையும் காமவெறியும்
பகுத்தறிவைத் தகர்த்தெறியும்
ஹைட்ரஜன் குண்டுகள்.
காமவெறி பிடித்தவளின் இணக்கம் இன்றி
கூடா நட்பிற்கு அழைப்பு இல்லை.