எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லோரும் நலமா

மேலும்

நல்ல எழுத்தாளர் 

என்பதைப்போல நல்ல மனிதர்.
நம் தளத்தின் சுஜய் ரகு அவர்களின் பிறந்த நாள் இன்று.
எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

மேலும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுஜய்..( நெட் problem காரணமாக எனக்கு நேற்று வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. எனது அன்பும் ஆசிகளும் உங்களோடு எப்போதும் உண்டு..சுஜய்..) 28-Dec-2015 1:53 pm
பிறந்தநாள் வாழ்த்துகள் நட்பே ! 27-Dec-2015 4:36 pm
சக தோழமைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 27-Dec-2015 2:36 pm
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா வாழ்க வளமுடன் 27-Dec-2015 11:54 am

படித்ததில் பிடித்தது
""""""""""""""""""""""""""""""""""""""
எதிர்பார்ப்பு
ஏதுமில்லா 
எப்போதும் சுற்றிவரும் 
தோள் கொடுத்த தோழமைகள் 

இப்போதும் ஞாபகத்தில் 
எல்லாமே நினைவுகளில் 
நினைவு மறந்த வேளைகளில் 
நிகழ்கால வேலைகளில்... 

எங்கிருந்தோ ஒரு பாட்டு 
எல்லாவற்றையும் கிளறிவிடும். 
நான்கு நிமிடப் பாடலொன்றில் 
மூன்று வருடம் வாழ்ந்துவிடுவேன்.!!

                   - ராம்வசந்த் 

மேலும்

எதார்த்தம் நிறைந்த உண்மை வாழ்த்துக்கள் 19-Nov-2015 7:13 pm
நல்ல படைப்பு தோழரே.. 29-Sep-2015 6:29 pm

கல்யாண்ஜீ கவிதை

""""""""""""""""""""""""""""""""
லாரி துப்பின உடம்புடன்
ரத்தப் பட்டாணிகள் சிதற
நாய் கிடந்தது
நசுங்கி.

சாராயக் கடைக்குள்
நுழையும் ஒரு ஆள்
திரும்பிப் பார்த்து
உள்ளே போனார்.

படம் போட்டு விட்ட
அவசரத்தில்
வேர்க்கடலை வாங்கி
இடுப்புக்குழந்தையுடன்
இரண்டு பேர் ஓட
தெருவிளக்கு வெளிச்சத்தில்
உப்பின வயிறுடன்
நாய்
ஓரமாய் கிடந்தது
இரண்டாம் நாள்.

இன்றைக்கும் அங்கேயே
இன்னும் கிடப்பதால்
நர்சரிக் குரலில்
குழந்தைகள் சொல்ல

சாப்பிட்டுவிட்டு அதைப்
பேசச் சொல்லி
நாகரிகம் கற்றுத் தருவாள்
அம்மா.

நாற்றத்துக்கு மூக்கை மறைத்து
எதிர்த்த வரிசையில்
நான்காம் நாள் காலையில்
ஓரமாய்ப் போனேன்
அதையும் தாண்டி
அப்புறம் போக
எனக்கும் சின்ன
வேலை இருந்ததால்.

மேலும்

படித்திருக்கிறேன்.. நல்ல பகிர்வு..! 23-Sep-2015 1:03 pm
அற்புதம்--யதார்த்தம் 23-Sep-2015 12:26 pm

கவிஞர் தீக்குன்னியின் கவிதை

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிறகு
,,,,,,,,,,,,,

நீயும் குழந்தைகளும் 
என்றென்றைக்கும்
என்னுடையவர்கள் மட்டும்தானென்று நான் நம்பவில்லை
இதுபோன்ற துர்விதி என்னை
வேட்டையாடுமென்றால்
நாளை உங்களை ரட்சிப்பதற்கான
எனது கடைசி தந்திரமும் தவறிப்போகும்
பட்சத்தில்
உனக்கு விருப்பமில்லை என்றாலும்
உனது இதயம் வேறு ஒருவனுடைய சூடு 
தேடிச்செல்லும்
அவன் பரிசாய் தருகின்ற
இனிப்புப் பலகாரங்களிலும்
விளையாட்டுச் சாதனங்களிலும்
நமது குழந்தைகள் சந்தோஷத்தில் 
மூழ்கிப்போவார்கள்
பிறகு பிறகு
அர்த்தமற்ற இந்த வாழ்க்கையின் 
வெள்ளரித்தோட்டத்தில்
நான் வெறும் சோளக்கொல்லை
பொம்மைதான்.

மேலும்

அருமை. 19-Sep-2015 11:01 am
அருமை நண்பா !! நல்ல பகிர்வு !! 19-Sep-2015 7:36 am

கவிஞர் தீக்குன்னி கவிதை

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


அம்மாவும் அக்காவும் குடிசையும்
தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது
மண்ணெண்ணை மணக்கின்ற
இருட்டிலிருந்து
எழுந்துவந்த குழந்தை
இறைவனிடம் கேட்டது
ஒருபோதும் தேயாத ஒரு பென்சில்
வேண்டுமென்று
இறைவனும் நல்ல ஒரு பென்சிலை
கொடுத்துவிட்டுச் சொன்னான்
பத்திரமாக வைத்துக்கொள்
ஒரு போதும் எழுதக்கூடாது

மேலும்

மிகச் சிறப்பான வரிகள்...தேயாத பென்சிலுக்காய் ஒருபோதும் எழுதவே கூடாது...அசத்தல் நட்பே... 20-Sep-2015 12:57 pm
அருமை! 19-Sep-2015 2:32 pm
அருமை என்று எல்லாரும் கருத்திட்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த கவிதையைப் படித்தவுடன் மனதில் தோன்றும் சொல் அதுதான்..அருமை 19-Sep-2015 11:40 am
அருமை. 19-Sep-2015 11:01 am

உறவுகளின் பிடியில் இருந்து..

என் ஒவ்வொரு விரலாய்..
விடுவிக்கப்பட்டது..
இப்போது இழப்பை மறைத்துக்கொண்டு..
கண்ணீரை துடைத்துக்கொண்டு..
உயரப்பறக்கிறேன்.!
பூமி எனக்கு தெரிகிறது..
கூடவே பூமியில் வாழும் உறவுகளும்..
மிகத்தெளிவாகத்தெரிகிறது.!
நான் இன்னும்..
உயரப்பறக்க சிறகசைக்கிறேன்.!

மேலும்

ஏன் கண்ணா? திரும்பி வாங்க பேசி தீர்த்துக்கலாம் கவிதையில் பதியலாம்..... அருமை 16-Sep-2015 7:47 am

ஜெயா டிவில அவுங்கள திட்ராங்க.

கலைஞர் டிவில இவுங்கள திட்ராங்க.
மக்கள் டிவில எல்லாரையும் திட்ராங்க.
கேப்டன் டிவில யார்யாரையோ திட்ராங்க.
வசந்த் டிவில யும் திட்ராங்க.
சன் டிவிலயும் திட்ராங்க.
சேனல் மாத்திக்டே இருந்தேன்..
எங்க வீட்லயும் திட்ராங்க..

மேலும்

எஜமான் இந்த டிவி-காரனுங்களே இப்படித்தான்... பாக்காதீங்க எஜமான்...... பாக்காதீங்க....! 16-Sep-2015 12:18 pm

தாவிக்குதித்து..

எட்டிப் பிடித்து பூ கொய்கிறாய்.!
கிளையில் தொங்குவது
கனி என்று..
உன்னை பார்த்து பசியோடு வருகிறது..
பறவைக்கூட்டம் ஒன்று.!

மேலும்

நன்றி நண்பா 15-Sep-2015 3:44 pm
தோழரே அர்த்தங்கள் ஆயிரம் போங்கள்..ரசித்தேன் ரசித்தேன் 15-Sep-2015 3:37 pm
இரசித்து கருத்திட்டு கவிதையாக அங்கீகரித்தமைக்கு நன்றி நண்பரே 15-Sep-2015 3:21 pm
அருமை அருமை கவிதையாகவே பதிவு செய்யலாமே கண்ணா..? 15-Sep-2015 3:11 pm

நீ..புத்தாடை 

அணியும்போதெல்லாம்..
ஒரு வண்ணத்துப்பூச்சிபோல
இருக்கின்றாய்.!

மேலும்

மேலும்...

மேலே