காடெனும் ஓர் கனவு
அவ்வனத்தில்
பாடும் பறவையையோ
பேரிரைச்சலோடு
சோவெனக்
கொட்டிக்
கொண்டிருக்கும் அருவியையோ
பூ நகரும்
நதியினையோ
பின்தொடரும் வண்ணத்துப்
பூச்சியையோ
தொன்மத்தின் விழுதாடும் பெருமரங்களையோ
பெருமரங்கள் கொண்ட
சிறுகூடுகளையோ
கிளை
தாவிக்கொண்டிருக்கும்
என் உறவுகளையோ
நான் பேன்
பார்த்துக்கொண்டிருந்த
என் பேரன்பையோ
காடு சேர்த்த
இந்த கனவையோ
கனவு சேர்த்த
இந்த உறக்கத்தையோ
அவ்வனத்தின்
யவ்வனத்தையோ
வில(ள)ங்கிட
முடியாதுனக்கு
உன் விலங்கின்
நீளம் நீதரும் சுதந்திரத்தை விட
அக்கனவு
அவசியமாகிறது
- நிலாகண்ணன்