இறந்து பார்க்கிறேன்

தோற்றம் மறைவு
எழுதி மாலையிட்ட
மார்பளவு புகைப்படத்தில்
என் பிம்பம் படிய
நேரெதிராய்
சிலமணித்தியாளங்கள்
நின்று பார்க்கிறேன்.

இப்படித்தான் யாருமற்ற
தனிமையில்
இறந்து பார்ப்பது
அவசியமாகிறது

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Jul-16, 4:25 pm)
Tanglish : iranthu parkkiren
பார்வை : 125

மேலே