வாய்த்தவளைக் கண்டு வழிந்திட்டான்

வாய்த்தவளைக் கண்டு  வழிந்திட்டான்

​மலரொன்றின் இதழ் விரிந்திருக்க
--மங்கையவள் தலை கவிழ்ந்திருக்க
மாலைநேரம் இருள் கவ்வியிருக்க
--மாண்டவர் பூமியாய் சூழலிருக்க
காரணத்தை அறிந்திட மனம்துடிக்க
--காலம் கனியுமென காத்திருக்க
காதலின் நிலையென நினைத்திருக்க
​--காதலுனும் இன்னும் வாராதிருக்க
​காத்திருக்கும் அவனுக்கோ படபடக்க
--அமைதியே அங்கு நிலைத்திருக்க
அண​​ங்கவள் சற்றும் அசையாதிருக்க
--ஆண்களுக்கே உரிய அவசரமிருக்க
ஆத்திரமோ பொங்கி வழிந்திருக்க
​--வினவியும் பதில் உரைக்காமலிருக்க ​
​​விடியும்வரை அவனும் காத்திருக்க
​--முடிவாய் காதலன் முணுமுணுக்க
முல்லைச் சிரிப்பையும் அவளுதிர்க்க
​--வாயடைத்து நின்றான் வாலிபனவன்
வாய்த்தவளைக் கண்டு வழிந்திட்டான் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Jul-16, 3:39 pm)
பார்வை : 81

மேலே