நாணம்

பூந்தளிரே மௌனம் என்ன - இந்த
பூவைக்கு பெயர் என்ன
நிலவோ......
எழிலோ......
இல்லை, கவியோ......

தா....னான தானனா....
தன தா....னான தானனா....

கார் மேக ஓடையில்
பால் வண்ண நிலவு
நான் காணும் வேளையில்
முகம் மறைக்க லாகுமோ

தா....னான தானனா....
தன தா....னான தானனா....

அந்த வானோடும் மீனுக்கும்
துள்ளி நீரோடும் மீனுக்கும்
உனைக் காண ஆவலாம்
நீ முகம் காட்டாயோ

தா....னான தானனா....
தன தா....னான தானனா....

செம் புனலோடும் உடலிது
யாரும் இங்கு அறிந்ததே
நாணம் கொண்டே நீயிங்கு
முகம் சிவப்பது ஏனம்மா

தா....னான தானனா....
தன தா....னான தானனா....

காதல் கொண்ட பேரழகு
தையல் கொள்ளும் நாணமே
இருவர் கொண்ட காதலில்தான்
இந்த உலகும் வாழுது

தா....னான தானனா....
தன தா....னான தானனா....

நதியும் கரையும் போலவே
நாமும் இங்கே வாழலாம்
முல்லைக் கொடி உன்னை
தாங்கி நிற்பேன் நானம்மா

தா....னான தானனா....
தன தா....னான தானனா....

இருள்வான் பெற்ற வரமந்த
ஒளிர் வண்ண நிலவுதான்
நான் பெற்ற வரமோ
நீ எந்தன் உயிரடி

தா....னான தானனா....
தன தா....னான தானனா....

சிதறி விழுந்த முத்துக்களோ
எனைக் கண்டு சிரிக்குது
வளையாடும் திரு கரங்களோ
கண்கள் மூடுது நாணத்தில்
நாணம் என்னிடம் ஏனம்மா......
நான் உனக்காய்த் தானம்மா......

தா....னான தானனா....
தன தா....னான தானனா....
தன தா....னான தானனா....நனனா............

- செ.கிரி பாரதி

எழுதியவர் : செ.கிரி பாரதி (4-Jul-16, 3:05 pm)
Tanglish : naanam
பார்வை : 824

மேலே