என் தேவதை வருகிறாள்

தென்றல் தேடியது
தேவதையை
சிவந்த இதழ்கள் சிரித்திட
சின்ன விழிகள் கவிந்திட
கன்னம் இரண்டும் குழிந்திட
வாசல் திறந்து மெல்ல வருகிறாள்
என் தேவதை
காஷ்மீர் பனியாய் குளிர்ந்து
வரவேற்குது தென்றல் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (4-Jul-16, 3:05 pm)
பார்வை : 117

மேலே