அழகி

முழு உடல் மறைத்த
வண்ண உடை உனக்கு வனப்பு......

மரம் கொத்திப் பறவைப் போன்ற
உன் கழுத்து சங்கின் கலப்பு......

இரு விழி ஏவும் அம்புகள்
இதயம் துளைத்தாலும் நிற்காது என் துடிப்பு......

பின்னி முடியாதக் கூந்தல் தான்
உனக்கு மட்டும் ஏனோ?... அது அழகு ......

ஆடையில் வரைந்தப் பூக்கள் தான்
ஆனாலும் ஆளைக் கொள்ளும் வாசம்......

கல் உடைத்தக் கைகள் தான்
உன்னைப் பார்த்தப் பிறகு
சிலை வடிக்கவும் தோணுதே......

எழுதியவர் : இதயம் விஜய் (4-Jul-16, 1:34 pm)
Tanglish : azhagi
பார்வை : 309

மேலே