அழகு சுந்தரி

ஆகாய கார்மேகப் பந்தலுக்குள்
கண் கவரும் முழு மதி......

வான் நீந்தும் வெள்ளி மீன்கள்
சேர்த்துக் கட்டியப் பூச்சரம்......

தூக்கனாங் குருவிக் கூடுப் போல
தூழி ஆடும் காதணி அழகே......

கவிழ்த்து வைத்த அகலெனும் நெற்றியில்
நிமிர்ந்து எரியும் தீபமும் அழகே......

முத்துக்கள் கோர்த்தக் கழுத்தின் மணி
முத்தமிடுது மார்பின் மேலே......

சிவந்து விரிந்த முட்செவ்வந்தியில்
சீரான இரண்டு சீர்வரிசைகள்
புன்னகையில் பூத்து சிரிக்குதே......

இந்திர லோகத்துச் சுந்தரி இவள்
ஓர விழி மோகப் பார்வையில்
உடையாமல் உடையுதே இதயமே......

எழுதியவர் : இதயம் விஜய் (4-Jul-16, 1:10 pm)
பார்வை : 322

மேலே