சார்லி கிருபாகரன்- கருத்துகள்

அருமை மன்னிக்கவும் காலம் கடத்தி ரசித்ததற்கு

நிறப் பிரிவினைகள் இங்குமுண்டு,
பிரித்தாளுதல் சூழ்ச்சியுமல்ல,
மூடிமறைத்தல் முறைதானிங்கு,
தீண்டாமைகள் உரிமையிங்கு,
மண்செரிக்கா முடைகளை
முட்ட நிறைப்பாருமுண்டு
இழிவென்று எனையும் இடம் சேர்ப்பாரில்லை ஆயினும்
கழிவென்று எதனையும் நான் கழித்ததில்லை
படைகொண்டு பகட்டாய் நிலம் தூய்த்தாலும்
விடைகண்டார் யார் - எனை நித்தம்
தொகையிட்டாரே
உறையிட்ட விரல்களால் என்னைத் தொடு...
உலரவிட்ட பின்னால் உரமாக்கு...
உயிர்க் களை நீக்கு!

அத்தனைக்கும் போதுமென்று
அத்தனைக்கும் போதுமென்று நான்
நினைத்த தமிழும் உன்முன்
குறைவெனத் தோணுதடி
இத்தனைக்கும் காலமென்ன கடந்திருக்கு
உன்மூச்சுக் காற்றையே
கவிதையென முன்னொருநாள்
சொல்லிவிட்டேன் – உன்
முத்தக்கற்றைகளை என்னென்று
சொல்லிவைப்பேன் – அத்தனைக்கும் போதுமென்று
நான் நினைத்த தமிழும் உன்
முன் குறைவெனத் தோணுதடி

தம்பி முதல்ல அந்த இடஒதுக்கீடும் ரேசன் பொருட்களுக்கும் சொல்லப்பட்டவங்களுக்கு முழுசா கிடைச்சிருச்சான்னு முதல்ல கேளுங்க

அட போங்க தம்பி அப்படி ஒரு பிள்ளை இருந்தா வீட்டுக்கு பக்கத்துல பெட்டிக்கடைய போட்டு உட்காந்துர வேண்டியதுதான். அதான் அந்த பிள்ளைய பாக்க உங்கள மாதிரி இளவட்டப் பசங்க வருவீங்கல்ல உங்களுக்கு கடல கிடலய வித்துக்கிட்டு பொழப்ப ஓட்டவேண்டியதுதான்

பொய்த்த விளைச்சலுக்கு வாங்கிய கடன அடைக்க
மானம்தான் முக்கியமுன்னு
தாலியயும் அடகு வச்சு கடன முழுசா அடைச்சிட்டான்
இவனுக்கு கடன் தள்ளுபடி உண்டா...?
விவசாயி - இனி தமிழகத்தில் வாழ்ந்த ஓர் மூத்தகுடி அவனது எலும்புகள் அகழ்வாய்வுக்காய் விட்டுவைக்கப்பட்டுள்ளது

பொய்த விளைச்சலுக்கு வாங்கிய கடன அடைக்க
மானம்தான் முக்கியமுன்னு
தாலியயும் அடகு வச்சு கடன முழுசா அடைச்சிட்டான்
இவனுக்கு கடன் தள்ளுபடி உண்டா...?
விவசாயி - இனி தமிழகத்தில் வாழ்ந்த ஓர் மூத்தகுடி அவனது எலும்புகள் அகழ்வாய்வுக்காய் விட்டுவைக்கப்பட்டுள்ளது

நான்கு வரிகளில் நீர், நிறுத்திக் கொண்டீர்

ஆனால் ஆயிரம் வரிகளை அந்தப்படம் சொல்லிக்கொண்டேயிருக்கும்
அந்த மனிதனின் காலடி நாம் தொட்டே ஆகவேண்டும்
மரியாதைக்கல்ல மன்னிப்பு கேட்க
அந்த கழிவுகளில் என்னுடையதும் இருக்கும்

பேச்சின் நடுவில் உன்னை பார்த்துகொண்டே இருப்பேன்

பின் நடக்கப்போவதை நீ தான் சொல்ல வேண்டும் - அழகு,
என் விழிகள் பார்த்த கடைசி பிம்பம் உன்னுடையதுதான்
என் கருவிழிகளில் நீ இன்றும் உயிரோடு
நான் மட்டும் .....

போதும் என்ற அளவு கொண்டு
பொன் உலகில் வாழ்ந்திடுவாய்
-அளவுகள் நிர்ணயித்தாலே வெற்றிதான், வாழ்த்துகள்

உஸ் அப்பா கடைசிவரைக்கும் இந்த புள்ளைக திருந்தவே மாட்டுதுங்களே

முதிர்ந்த கால்களுக்கு
செருப்புகள் கிடையாது;உருகி வெடித்த பாதங்கள்
அந்த செருப்பைக் காட்டிலும் வலிமை

இன்னும் நான்கு வீடுகள் சலவைக்காய்
ஏறி இறங்கினால் போதுமென்று....

உடலின் வியர்வையை கூட நுகர்ந்து
மூக்கை பொத்திக் கொள்ளும் மானிடக்கூட்டம்
சாக்கடையில் இறங்கி வேலை செய்யும்
உடலை உயிராக என்றும் மதித்ததில்லை.
- நல்ல வரிகள்
உழைப்பவன் தேகத்திற்கு கந்தல் ஆடைகளே
அடையலாம்.
திருத்தம் 'அடையாளம்' என நினைக்கிறேன்


சார்லி கிருபாகரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே